உக்ரைன் விவகாரம் குறித்து நாளை இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்

0
217

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதில் ஒன்றிய அரசு தாமதம் செய்ததாக குற்றச்சாட்டு ஏழுந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கியது. கொரோனா 3-வது அலை காரணமாக முதல் பகுதியில் மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனி நேரத்தில் நடந்தது.

தற்போது கொரோனா பரவல் தணிந்து விட்டதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டமும் தொடங்கியது. உக்ரைன் விவகாரம், பி.எஃப் வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. துணை மானியக் கோரிக்கை குறித்த அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ரஷியா-உக்ரைன் போரால் பரபரப்பான சூழல் நிலவுகையில் இந்த தொடர் தொடங்கியுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்