22,500 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்பு – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை.!

0
157

ரஷ்யா ,உக்ரைன் மீது நடத்திவரும் போரினால் உக்ரைன் மக்கள் மட்டுமன்றி கல்விக்காகவும் வேலைக்காகவும் அங்கு தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து வெளியேறும் முயற்சிகளில் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு இந்திய விமானங்கள் மூலமாக உக்ரைனில் இருந்து நேரடியாகவும் அண்டை நாடுகள் வழியாகவும் அவர்களை மீட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வந்தது.

Ukraine crisis: Pakistani, Turkish nationals safely cross borders with  Indian flag - BusinessToday
indian students

இந்த நிலையில் போர் தொடங்கியது முதல் இதுவரை உக்ரைனில் இருந்து சுமார் 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் “மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்” அறிக்கை தாக்கல் செய்தார். பெரும்பாலும் மருத்துவப் படிப்பிற்காகவே இந்திய மாணவர்கள் உக்ரைனில் தங்கியிருந்தனர். போர் சூழலில் படிப்பைத் தொடர முடியாமல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில் மீட்கப்பட்ட இந்திய மாணவர்களின் படிப்பை மேலும் தொடர மத்திய அரசானது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொறுப்புடன் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்