ஜெயலலிதா மீதான வழக்கில் தீபா, தீபக் பெயர் சேர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

0
128

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கில் ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் “தீபா மற்றும் தீபக்” ஆகியோர்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா 2008,2009 ஆண்டுகளில் அவரது சொத்துகளுக்கான செல்வ வரியை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜெயலலிதா தரப்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை விசாரித்த “வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்” 2008ஆம் ஆண்டு அந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக வருமான வரித்துறையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் “மகாதேவன் மற்றும் சத்தியநாராயணபிரசாத்” ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது..

சென்னை உயர் நீதிமன்றம் .கோப்புப் படம்

அப்போது ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமாகி விட்ட காரணத்தால் அவரது வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோரை இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என வருமானவரித் துறையின் சார்பாக கோரிக்கை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தீபா மற்றும் தீபக் ஆகியோரை சேர்ப்பதற்கான அனுமதியை வருமான வரித்துறைக்கு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதற்கு இடைப்பட்ட நாட்களில் இவ்வழக்கு விவரம் தொடர்பான முழு ஆவணங்களையும் தீபா மற்றும் தீபக் ஆகியோரின் வழக்கறிஞர்களுக்கு வருமான வரித்துறையினர் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வி.தமிழ்நெறி,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்