விவசாயிகளுக்கு இலவச ஹெலிகாப்டர் சுற்றுலா

0
116

கர்நாடக மாநிலத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டு அதில் விவசாயிகள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர் கர்நாடகாவில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று விவசாயிகள் மட்டுமின்றி ஆடு மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இந்த ஹெலிகாப்டர்களில் அழைத்துச் செல்லப்பட்டனர் . இதேபோன்று கர்நாடகாவில் விவசாயிகளுக்கு இலவசப் படகு சவாரியும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்நாடக சுற்றுலாத் துறையானது ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்