‘திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய இலவச டிக்கெட்டுகள் ‘- தேவஸ்தானம்

0
378

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கோயில் கவுண்டர்களில் இன்று முதல் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவித்து டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது கோயில் நிர்வாகம்.கொரோனோ கால நடவடிக்கையாக சாமி தரிசனம் செய்ய 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டன. தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மேலும் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. தினமும் 10,000 பக்தர்களை அனுமதிக்கும் வகையில் வழங்கப்படும் டிக்கெட்டுகளை 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பக்தர்கள் தகுந்த ஆதாரங்களைக் காட்டி வாங்கிக் கொள்ளலாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்