விபின் ராவத், மதுலிகா ராவத்துக்கு வெள்ளிக்கிழமை இறுதி மரியாதை

0
241

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் இறுதி மரியாதை தில்லி கன்டோன்மென்ட்டில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் மற்றும் உடன் சென்ற 13 பேர் உயிரிழந்தனர். விங் கமாண்டர் வருண் சிங் காயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

வெலிங்டனில் விபின் ராவத் உடலுக்கு முப்படைத் தளபதிகள், முதல்வர் நாளை அஞ்சலி

விபத்தில் உயிரிழந்த விபின் ராவத் மற்றும் மனைவியின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலை தில்லி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்படுகிறது. அங்கு பகல் 11 மணி முதல் 2 மணி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. தில்லி கன்டோன்மென்டில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு உடல்கள் தகனம் செய்யப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்