4 ஆயிரம் சொகுசுக் கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது.

0
309

ஜெர்மனி நாட்டில் இருந்து 4 ஆயிரம் சொகுசுக் கார்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்கா நோக்கி கடந்த மாதம் சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. அந்தக் கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பெண்ட்லிஸ், போர்சிஸ், பென்ஸ், லம்போர்கினி, வெல்ஸ்வாகன் உள்பட ஆயிரக்கணக்கான சொகுசுக் கார்கள் இருந்தன.அட்லாண்டிக் பெருங்கடலில் போர்ச்சுக்கல் நாட்டின் அசொரிஸ் தீவு பகுதி அருகே கடந்த 16-ம் தேதி சென்றபொது கப்பலில் தீடிரென தீ பிடித்து எறிந்தது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போர்ச்சுக்கல் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், கப்பலில் சிக்கியிருந்த 16 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ஆனால், சரக்கு கப்பலில் தீ மளமளவென பரவியது. தீயை அணைக்கும் முயற்சிகளில் போர்ச்சுகல் கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.. ஆனால், கப்பல் முழுவதும் தீ மளமளவென பரவியதால் தீயை அணைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், தீ பற்றிய சரக்கு கப்பல் முழுவதுமாக தற்போது அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ளது. இதனால், சரக்கு கப்பலில் இருந்த 4 ஆயிரம் சொகுசு கார்களும் கடலில் மூழ்கின. கடலின் அடியில் 3.5 கிலோ மீட்டர் ஆழத்தில் சரக்கு கப்பல் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சரக்கு கப்பலில் இருந்து இதுவரை எரிபொருள் கசிவு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்