ஆண் நண்பருடன் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை.

0
198

வேலூர் நகரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருவர் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரிக்கும் போது அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்களது ஆட்டோவில் ஆண் நண்பருடன் பயணித்த பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்து அவர்களிடமிருந்து பணம், செல்போனை பறித்து வந்ததாக அவர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பெண் ஒருவர் கடந்த 16ம் தேதி தனது ஆண் நண்பருடன் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்று விட்டு இரவு 1 மணி அளவில் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது திடீரென ஆட்டோவில் ஏறிய 4 பேர், பெண்ணிடமும் அவரது ஆண் நண்பரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளைப் பறித்ததுடன் அந்த பெண்ணைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர்.

Unnao rape victim gang-raped again by 5 men on pretext of help in UP |  Catch News

பின்னர் ஏடிஎம் ற்கு சென்ற அவர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 4 பேரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்த ஏடிஎம் கார்டு, செல்போன் மற்றும் ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்