கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு இன்பச்செய்தி.

0
315

சுற்றுலா பயணிகள் சோதனை செய்து 24 மணி நேரமும் விடுதி அறையை பயன்படுத்திக்கொள்ளலாம் என கொடைக்கானல் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் தங்கும் விடுதியில் காலை 10 மணிக்கு சோதனை என்ற விதிகள் சட்டவிரோதமானது. செக் இன் செய்யும் நேரத்திலிருந்து 24 மணி நேரம் சுற்றுலாப் பயணிகள், விடுதி அறையை பயன்படுத்த உரிமை உண்டு ,என தனியார் விடுதி உரிமையாளர்களுக்கு கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.

இதேபோல், கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் விலைப்பட்டியலை வைக்க வேண்டும் எனவும், தனியார் விடுதி உரிமையாளர்களுக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்