Sunday, October 24, 2021

கோரக்பூர் தேர்வாளர் பட்டியலை தெற்கு இரயில்வே திருப்பி அனுப்பியது.

உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில் ஓட்டுநர் தேர்வாளர்கள்பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டது.எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தெற்கு இரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி என சு. வெங்கடேசன் எம்.பி நன்றி பாராட்டியுள்ளார்.

தெற்கு ரயில்வேயில் 51 இரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு வடகிழக்கு ரயில்வேயின் கோரக்பூர் தேர்வாணையத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேர் பட்டியலை தெற்கு ரயில்வே கேட்டு வாங்கியது. அந்த பட்டியல் 24 .9. 2021 அன்று தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டது.

இந்த செயல் எந்தவகையிலும் நியாயமானதல்ல, இது நிறுத்தப்படவேண்டும் என்று 25 .9. 2021 அன்று ரயில்வே அமைச்சருக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும், நான் கடிதம் எழுதினேன். தெற்கு ரயில்வே எனது கோரிக்கையை ஏற்று அந்த கோரக்பூர் தேர்வாளர் பட்டியலை 28-9-2021 அன்று திருப்பி அனுப்பியுள்ளது.

தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்கும்
எனது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் 51 காலியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆர்.ஆர்.பி சென்னைக்கு தேர்வானவர்களைத் தேர்வு செய்திட தெற்கு ரயில்வே பொது மேலாளரை கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே ஆர்.ஆர்.பி சென்னை இணையதளத்தில், அறிவிக்கப்பட்ட காலியிடங்கள், அதிகரிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் 2022 வரை பணியமர்த்தளாம் என்றும் இணையதளத்தில் உள்ளது . எனவே தெற்கு இரயில்வே பொது மேலாளரை
சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த 51 காலியிடப்பணிகளில் நிரப்பிட கோருகின்றேன்.

தேவைப்பட்டால் இரயில்வே அமைச்சரை, இதில் தலையிடவும் அதற்கு அனுமதி வழங்கவும் கோருகின்றேன் என திரு சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தகவல் பகிர்ந்துள்ளார்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
2,994பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,700சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles