ரூ.1,600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்து: வணிகம் செய்ய தமிழகம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

0
307

துபாய்: துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1,600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து. தமிழகத்தில் ரூ.1,600 கோடி முதலீடு செய்ய அமீரக தொழில் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.* வைட் ஹவுஸ் இண்டகிரேட்டட தையல் தொழில்சாலை ரூ.500 கோடி முதலீட்டில் தொடங்க ஒப்பந்தம்* நோபல் குழும்ம் சார்பில் ரூ.1,000 கோடி மூதலீட்டில் எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம்* நம்பிக்கையுடன் முதலீடுகளை செய்வதற்கு உகந்த தூத்துக்குடி அறைகலன் பூங்கா அமைக்கப்படும் துபாய் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை: எஃகு தொழிற்சாலை மூலம் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். என உறுதியளித்தார். உலகளிவில் புகழ்பெற்ற பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகளை செய்து வருகின்றன. தொழில் புரிவதற்கும், முதலீடு செய்வதற்கும் தமிழத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என பேசினார். வணிகம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உலகளவில் பொருளாதார மேம்பாட்டு மையமாக தமிழ்நாட்டை மேம்படுத்துவதே குறிக்கோள். தமிழ்நாட்டில் உலகத்தரத்தில் உள்கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தமிழ்நாட்டில் வணிகம் செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன். தமிழ்நாடு – துபாய் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உலகின் அழகான நகரமான துபாய் நகரம் வணிகத்திலும் சிறந்து விளங்குகிறது. ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக துபாய் விளங்குகிறது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்