பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க அரசாணை வெளியீடு

0
274

பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள், மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-2022 – ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில் “தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் “பத்திரிகையாளர் நல வாரியம்” அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது, அந்த ஆணையில், பத்திரிகையாளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித்துறை அமைச்சர் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 நபர்களையும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 6 நபர்களையும் கொண்ட குழு அமைக்கப்படும்.

பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையாக , பத்திரிகைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணத்தில் சதவீதம் தொகையை EMAI ஊதியத்திற்கென வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது, பத்திரிகையாளர் நல வாரியத்திற்கென புதிதாக ஒரு நிர்வாக அலுவலர் பணியிடமும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பணிபுரியும் அலுவலர்களே பத்திரிகையாளர் நலவாரிய பணிகளையும் மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நல வாரிய புதிய நல உதவிக் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்