அரசு போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் நெல்லை தூத்துக்குடி பைப்பாஸ் சாலையில் அமர்ந்து மறியல்

0
208

கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம், விடியல் அரசை கண்டிக்கிறோம்

கோடி, கோடியாக கொட்டிக் குவித்த தொழிலாளிகளை
வஞ்சிக்கும விடியல் அரசை கண்டிக்கிறோம்.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத விடியல் அரசை கண்டிக்கிறோம்.

இரவும், பகலும் உழைத்து கொடுத்த கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்த போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை கண்டுக்காத விடியல் அரசை கண்டிக்கிறோம்.

இவ்வாறு கோஷங்கள் எழுப்பியவாறு சாலையின் இருபக்கத்திலும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கையில் கொடியையும், கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி சாலையில் அமர்ந்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.

காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத வகையில் அவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களின் பேருந்து ஒன்றினை அழைத்துவந்து பைபாஸ் சாலையின் இருபக்கத்திலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நான்கு பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர்.

காலை முதலே போக்குவரத்து அரசு அரசு போக்குவரத்து மத்திய அலுவலக வாயில் முன்பாக சாமியானா பந்தலில் அமர்ந்து போராடிக்கொண்டிருந்த ஓய்வூதியதாரர்கள் சிறிது நேரத்தில் படிப்படியாக நகர்ந்து பைபாஸ் சாலையின் இரண்டு பக்கங்களிலும் தரையில் அமர்ந்தனர்.

நிலுவையில் உள்ள 1600 கோடி ரூபாயை வழங்க கோரி காலை நடந்த ஆர்ப்பாட்டம் பின்பு நெடுஞ்சாலை மறியல் போராட்டமாக மாறியது.

இதனால் கேடிசி நகர் பகுதியில் திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மேற்கு நோக்கி செல்ல முடியாமல் இரு புறங்களிலும் அணிவகுத்து நின்றது. சாலையில் பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் சூழல் ஏற்படும் வகையில் இருந்ததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பேருந்தில் காவலர்கள் ஏற்ற முனையும் போது ஓய்வூதியதாரர்கள் பேருந்து முன்பாக படுத்து போராடினார்கள்.

வலுக்கட்டாயமாக காவலர்கள் இழுத்து பேரூந்தில் ஏற்றி கைது செய்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஓய்வூதிய தொழிலாளர்கள் பங்குபெற்றனர்.

பெ.சூர்யா , நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்