2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

0
89

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாதம் 2-வது முறையாக டெல்லி சென்றார். ஏற்கெனவே கடந்த 7-ம் தேதி சென்ற நிலையில் இன்று மீண்டும் டெல்லி புறப்பட்டார். கடந்த முறை ஆளுநர் சென்றபோது, உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை சந்திக்க திட்டமிட்டு சென்ற நிலையில் அவர்களை சந்திக்காமல் சென்னை திரும்பினார். ஆனால் இம்முறை உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்து தமிழக நிலவரங்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த பயணத்தின் போது, நீட் தொடர்பான பிரச்சனை, தமிழக புத்தாண்டின்போது தமிழக அரசு தேநீர் விருந்தை புறக்கணித்தது மற்றும் நேற்று மயிலாடுதுறையில் நடந்த சம்பவம் குறித்தும் தெரிவிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்த பின் பயணத்தை நிறைவு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை இரவு சென்னை திரும்ப உள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்