குரூப் அட்மின் பொறுப்பாக முடியாது-மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு

0
132

வாட்ஸ் அப் குருப்பில் ஒரு உறுப்பினரின் கருத்துக்கு குரூப் அட்மின் பொறுப்பாக முடியாது: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி.

கரூரைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன்,
கரூர் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் துவக்கி நடத்தி வருகிறார். இந்த குரூப்பில் ஒருவர் பிரச்னைக்குரிய ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் குரூப் அட்மின் என்ற வகையில் ராஜேந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர் .

இதில் ராஜேந்திரன் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் . ஒரு குழு உறுப்பினர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டியது அட்மினின் பொறுப்பு. ஆனால், பதிவுகளை முறைபடுத்தவோ, , தணிக்கை செய்யவோ அவரால் முடியாது. உறுப்பினரின் பதிவிற்கு அட்மின் பொறுப்பாக முடியாது என சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றம் கூட ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. .

மனுதாரர் குரூப்பின் அட்மின் மட்டுமே என்பது உறுதியானால், வழக்கின் இறுதி அறிக்கையில் அவரது பெயரை நீக்க வேண்டும், போதுமான ஆவணங்கள் கிடைத்தால் மட்டுமே அவரை வழக்கில் சேர்க்க வேண்டும். அதை அவர் மனுதாரர் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்