குஜராத்தில் பஞ்சாயத்து மாநாடு – பிரதமர் பங்கேற்பு.

0
143

குஜராத்தில் நடைபெறவிருக்கும் பஞ்சாயத்து மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். அவர் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். குஜராத்தின் முக்கிய நகரான காந்திநகரில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குஜராத் மாநில உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். நாளை காந்திநகரில் உள்ள தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார். பின்பு அங்கு நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாளை மாலை 6.30 மணியளவில் 11 ஆவது விளையாட்டுத் திருவிழாவையும் பிரதமர் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்