ஒலிபெருக்கிகளை அகற்றாவிடில் மசூதி முன்பாக ஹனுமான் பாடல்கள் ஒலிக்கும் : ராஜ்தாக்கரே கடும் எச்சரிக்கை!

0
315

ஒலி பெருக்கிகளை உடனடியாக அகற்றவில்லை எனில் மசூதிகள் முன்பாக ஹனுமான் பாடல்களை ஒலி பெருக்கி மூலமாக நாங்கள் பாடுவோம் என்று ராஜ்தாக்கரே கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் ஆற்றியுள்ள உரையில் கூறியிருப்பதாவது: எந்த மதத்தின் பிரார்த்தனையையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மசூதிகளில் இருக்கின்ற ஒலி பெருக்கிகளை மாநில அரசு அகற்ற வேண்டும். அப்படி அகற்றவில்லை எனில் எங்கள் தொண்டர்கள் மசூதிகளுக்கு முன்னாள் ஒலி பெருக்கியை வைத்து ஹனுமான் பாடல்களை பாடுவார்கள். ஒரு மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கிகளுக்கு என்ன வேலை இருக்கிறது. இதனால் நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் கிடையாது.

மேலும், மும்பையில் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலை என்னவென்று போலீசாருக்கு தெரியும். எனவே அப்பகுதிக்கு ரெய்டு நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வாக்கு வங்கிக்காக சில எம்.எல்.ஏ.க்கள் முஸ்லிம்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதியான ஆதார் கார்டு கூட கிடையாது. அதனை தேசியவாத காங்கிரஸ் சாதிரீதியாக மக்களை பிரித்துள்ளது. இந்த சாதிப்பிரச்சனையிலிருந்து விடுபடாமல் இருந்தால் எப்படி இந்துக்களாக மாறுவது. இவ்வாறு அவர் பேசினார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்