“தமிழனைத் தொட்டான், அவன் கெட்டான்” – மதுரை ஆதீனம் பரபரப்புப் பேச்சு

0
62

மதுரை பழங்காநத்தத்தில் “விசுவ ஹிந்து பரிஷத்” அமைப்பின் சார்பாக துறவிகள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திருப்போரூர், மதுரை, தர்மபுரம் உள்ளிட்ட ஆதீனங்கள் பங்கேற்று உரையாற்றினர்.

அப்போது பேசிய மதுரை ஆதீனம், ஆதீனங்கள் அரசியல் பேசாமல் வேறு யார் பேசுவார் எனவும், அரசியல்வாதிகளுக்கு கோயில்களில் என்ன வேலை எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், இலங்கையில் ஆட்சி புரிந்த ராஜபக்சே, தமிழர் நிலங்களில் உள்ள எண்ணற்ற கோயில்களை இடித்ததாகவும், தமிழர்களைக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்ததாகவும் அதன் விளைவாக ராஜபக்சே இன்று இருக்கின்ற இடம் தெரியாமல் போய் விட்டதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் இனப்படுகொலை செய்யும் போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார். அதன் விளைவாக இன்று வட மாநிலங்கள் முழுவதும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். “ஆக தமிழனை தொட்டான்,அவன் கெட்டான்” எனவும் அவர் ஆவேசமாக அம்மாநாட்டில் பதிவு செய்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்