உடலை உறுதியாக்கும் கம்பு…

0
350

(28-01-2022)

தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறு தானியங்களில் கம்பு முதன்மையான இடத்தைப் பெறுகிறது. சங்ககாலத் தமிழர்கள் நீண்ட நெடிய ஆயுளுடன் வாழ ஒரே காரணம் இயற்கையான உணவுகளை அவர்கள் உட்கொண்டு மனதையும் உடலையும் அழுக்கின்றி தூய்மையாக வைத்துக் கொண்டதனால் தான். அப்படி தமிழர்களின் பாரம்பரிய இயற்கையான சத்து மிகுந்த உணவுப் பட்டியலில் கம்பு ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.கம்பு ஒரு சிறு தானிய வகை பயிராகும். எண்ணற்ற சத்துக்களைக் கொண்ட கம்பைத் தொடர்ந்து உண்பதால் மனித உடலுக்கு பல அற்புதமான பயன்கள் கிடைக்கின்றன.

100 கிராம் கம்பில் உள்ள சத்துக்கள்:

கால்சியம் 42 கிராம்,11.8 சதவிகிதம் புரோட்டீன்,இரும்பு 12 மில்லி கிராம், விட்டமின் B11 6.32 மில்லிகிராம், ரைபோபிளேவின் 0.21 மில்லிகிராம், நயாசின் 2.8 மில்லி கிராம்,நல்ல கொழுப்பு 5 கிராம்.

கம்பை தொடர்ந்து கூழாகவோ, சோறாகவோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாவதுடன் தாய்ப்பாலும் தூய்மையாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உடல் எடை குறைவதுடன் உடல் பலப்படும் .உடல் சூடு தணியும்.என்றும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

இது குடலில் உள்ள புண்களை ஆற்றுவதுடன் குடல் புற்றுநோயையும் தடுக்கும். இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு மண்டலம் பலமாகும்.மூட்டு வலி எலும்பு இணைப்புகளில் ஏற்படும் வலிகளையும் இது குணப்படுத்தும். ஆரோக்கியமான மனதையும் உடலையும் பெற்று நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ தமிழர்களின் பாரம்பரிய சிறு மற்றும் குறு தானியங்களையும் இயற்கையான மருத்துவ குணம் கொண்ட அரிசி வகைகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து உண்ணுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்