தென் மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

0
409

கன்னியாகுமரி கடற்பகுதிக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாகவும், வெப்ப சலனத்தின் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் , புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வரும் 27 ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்