தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை

0
326

இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நிலவி வந்த காற்று சுழற்சி தற்போது மன்னார்வளைகுடாவை ஒட்டிய குமரி கடல் பகுதியில் நீடித்து வருகிறது. இக்காற்று சுழற்சி இன்று இரவு மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தென் கிழக்கு அரபிக்கடலுக்கு செல்லும்.

தென் கிழக்கு அரபிக்கடலுக்கு செல்லும் காற்று சுழற்சி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென் கடலோர மாவட்டங்களில் இன்று இரவு அதிகனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்காற்று சுழற்சி அரபிக்கடலுக்கு சென்றாலும் வங்க கடலின் ஈரப்பதத்தை வலுவாக இழுக்கும் என்பதால் நெல்லை ,தூத்துக்குடி ,இராமநாதபுரம், தென்காசி ,கன்னியாகுமரி ,ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது.

எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது?

பாம்பன் ,இராமநாதபுரம் தங்கச்சிமடம் ,தூத்துக்குடி மாநகர் காயல்பட்டினம் ,திருச்செந்தூர் ,குலசேகரப்பட்டினம், ஏரல் ,ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், நாசரேத் மாஞ்சோலை ,ஊத்து ,குதிரைவெட்டி ,பாபநாசம் அம்பை ,கல்லிடைக்குறிச்சி ,சேர்வலாறு ,மணிமுத்தாறு ,தென்காசி, ஆகிய இடங்களில் மிக கனமழை முதல் அதிக கனமழை வரை பதிவாகும். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30 செமீ க்கு மேல் மலைப்பதிவாக வாய்ப்புள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை :

இன்று தெனமாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மாஞ்சோலை ,பாபநாசம் ,காரையார், மேக்கரை உள்ளிட்ட மலைவாழிடங்களுக்கு செல்ல வேண்டாம். ஏனெனில் மாஞ்சோலை மலைப்பகுதியில் இயல்புக்கு மாறாக அதீத மழை பெய்யும். இந்தியாவிலேயே வடகிழக்கு பருவமழைகாலத்தில் அதிகமழைபெறும் பகுதி மாஞ்சோலை என்பதை மீண்டும் நிருபிக்கும்.

விருதுநகர் ,மதுரை ,சிவகங்கை, தேனி ,உள்ளிட்ட உள் மாவட்டங்களை பொறுத்தவரை மிதமான மழை பெய்யும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

நெல்லை ,தூத்துக்குடி ,தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி ,ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு இன்று இரவு மிக சிறப்பாக மழை பெய்யும் நாளாக அமையும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்