தமிழகத்தில் பத்து மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

0
259

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நாளை, மற்றும் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

இந்திய வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை சின்னம் விடுத்துள்ளதால் சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளையும் (10ந்தேதி), நாளை மறுதினமும் (11ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 11-ம் தேதி அதிகாலை வடதமிழக கடலோரப்பகுதியில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையடுத்து,

சென்னை,

திருவள்ளூர்,

காஞ்சிபுரம்,

செங்கல்பட்டு,

விழுப்புரம்,

புதுக்கோட்டை,

மயிலாடுதுறை,

மதுரை,

விருதுநகர்

திண்டுக்கல்

ஆகிய 10 மாவட்டங்களில் 10, 11-ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்