தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிக்கு ஐனவரி 31வரை விடுமுறை

0
276

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் 31 ந்தேதி வரை விடுமுறை – உயர்கல்வித்துறை தகவல், அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.


இதனையடுத்து 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் வரும் 31-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து பிஇ, கலை-அறிவியல் , பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை மருத்துவக்கல்லூரிகள், கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்