பல ஆண்களுடன் பேசியதால் இளம்பெண்ணை அடித்து கொன்ற கணவன் கைது

0
80

அம்பத்தூர்: அம்பத்தூர் காமராஜர் நகர் நேரு தெருவில் வசித்து வருபவர் வடமாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் பிரம்மா (26), தனியார் கம்பெனி ஊழியர். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊரான உத்தரபிரதேசம் சென்றிருந்தார். அங்கு, சந்தையில் காய்கறி கடை நடத்தி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவரும், கணவரை பிரிந்தவருமான ரசியா கத்தூனா (22) உடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதையடுத்து, ரசியா கத்தூனாவை திருமணம் செய்து, அம்பத்தூர் அழைத்து வந்துள்ளார். இருவரும் கடந்த 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரங்களில் ரசியா கத்தூனாவின் செல்போனை ஹரிஷ் ஆய்வு செய்தபோது, அவர் பல ஆண்களுடன் பேசியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ், மனைவியை தினமும் அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார். நேற்று ஏற்பட்ட தகராறில் மனைவியை கட்டையால் அடித்துள்ளார். இதில், மயங்கி விழுந்த ரசியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சோதனையில் ரசியா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, ஹரிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்