காற்று மாசுபாடு – உலகிலேயே புதுடில்லி முதலிடம். சென்னை?

0
136

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த “ஐ க்யூ ஏர்” நிறுவனம் உலகமெங்கும 6,476 நகரங்களில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகில் காற்று மாசுபாடு நிறைந்த முதல் 100 நகரங்களில் 63 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக “உலகிலேயே காற்று மாசுபாடு நிறைந்த நகரமாக புதுடெல்லி முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி மாநகரில் ஒரு சதுர மீட்டரில் உள்ள காற்றின் மாசு 96.4 மைக்ரோகிராம் ஆக உள்ளது எனவும் இது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவை விட ஐந்து மடங்கு அதிகம் எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi

இந்திய மெட்ரோ நகரங்களில் சென்னையில் மட்டுமே காற்று மாசு குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் ஒரு சதுர மீட்டருக்கு 25.2 மைக்ரோ கிராம் காற்று மாசுபாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகிலேயே அதிக காற்று மாசுபாடு உள்ள நாடாக வங்கதேசம் இருப்பதாக ஐ க்யூ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்