பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும் ; ஜெலன்ஸ்கி ஏச்சரிக்கை

0
111

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா, தலைநகர் கீவ்நகர்- கைப்பற்ற முடியவில்லை. உக்ரைன் அமெரிக்காவின் உதவியுடன் உயிரியல் நோய்கிருமிகளை தயாரிப்பதாக ஐநாவில் ரஷ்யா குற்றம் சாட்டியது. இதனைஅமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் ஐநா ஆயுதங்கள் ஒழிப்பு பிரிவு தலைவர் இசோமி நக்வின்சிவ் அப்படி உக்ரைனில் எந்தவிதமான உயிரியல் நோய்கிருமிகளும் தயாரிக்கப்படும் ஆதாரம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

உக்ரேனில் உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷ்யா குற்றம்சாட்டி இதில் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.இந்நிலையில் துருக்கி ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளேன s-400 ரக ஏவுகணைகளை உக்ரைனுக்கு அளிக்கும்படி அமெரிக்கா வலியுறுத்தியது.

உக்ரைனின் துறைமுக நகரான மரியூபோல்- ஐ கைப்பற்ற ரஷ்யா கடும் முயற்சி எடுத்து போராடி வரும் சூழ்நிலையில் மரியூபோல்-ஐ விட்டுக் கொடுக்க போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்து கடும் போரிட்டு வருகிறது உக்ரைன்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று இதுவரை போர் நிறுத்தம் தொடர்பான எந்த ஒரு உடன்படிக்கையும் எட்டப்படவில்லை.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்-ஐ அழைத்துள்ளார் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும் என்று ஜெலன்ஸ்கிஎச்சரித்துள்ளார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்