நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ/மாணவிகளுக்கு சுதந்திர தின சிறப்பு கவிதை கட்டுரை போட்டிகள்

0
185

இந்ந கொரனோ தொற்று காலத்திலும் சமூக இடைவெளியுடன் உற்சாகமாக போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள், 71 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதம் தமிழ் அஞ்சல் நாளிதழ், நெல்லை அரசு அருங்காட்சியகம் முகநூல் நண்பர்கள் குழு, இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கான கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தியது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியா தலைமை தாங்கினார்.

டக்கரம்மாள்புரம் டிடிடிஏ ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி முதல்வர் உமா முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் பங்கேற்றனர்.

முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு டேவிட் வரவேற்று பேசினார். முகநூல் நண்பர்கள் குழு ஆலோசகர் முருகப்பன், மற்றும் கல்லூர் வெங்கடேசன், அன்னை மெஸ் ராஜா, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நாளை மாலை 6 மணிக்கு அரசு அருங்காட்சியகத்தில் கவிதை கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் கலந்து கொள்கிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்