Tuesday, December 7, 2021

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலில் சுயேட்சைகள் காலூன்றினர்

ஊரக உள்ளாட்சித்தேர்தல் களத்தில் அரசியல் கட்சியினருடன் மோதிய சுயேச்சைகள் ஒரு சில இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உட்பட்ட 5-வது வார்டில் திமுக., பாரதிய ஜனதா, அமமுக என அரசியல் கட்சிகளும், இரு சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.

இந்த வார்டுக்கான தேர்தலில் போட்டியிட்ட உமாதேவி என்ற சுயேச்சை வேட்பாளர் ஐஏஎஸ் அதிகாரியான உமா சங்கரின் உடன்பிறந்த தங்கை ஆவார். மேல இலந்தைக்குளம், பன்னீரூத்து, சுண்டங்குறிச்சி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வார்டில் உமாதேவி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் உமாதேவிக்கு 2,219 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் திமுக வேட்பாளரான முருகேஸ்வரி என்பவர் 1218 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.இதனால் சுயேச்சை வேட்பாளரான உமாதேவி 1001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஐஏஎஸ் தேர்வில் அடிப்படை தேர்வு மற்றும் மெயின் தேர்வுகளில் இருமுறை வெற்றிபெற்று நேர்முகத்தேர்வுவரை சென்று தோல்வியடைந்த உமாதேவி உள்ளாட்சித்தேர்தல் களத்தில் சுயேச்சையாக வென்றிருப்பது கிராமமக்களை உற்சாகம் அடைய வைத்திருக்கின்றது.

மேலும் இத்தேர்தலில் இளையதலைமுறையினர் அநேகம்பேர் களம் கண்டுள்ளனர், வெற்றிவாகையும் சூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles