7 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 200 சிலைகளை இந்தியா மீட்டுள்ளது – மோடி

0
165

பதவியேற்றது முதல் இதுவரை, கடந்த 7 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 200 சிலைகளை மீட்டுள்ளதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமையும் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று நாட்டு மக்களிடையே மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது, “இம்மாத தொடக்கத்தில் இத்தாலியிலிருந்து விலைமதிப்பற்ற சிலைகள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது அதில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க சிலையும் ஒன்று, இந்த சிலை பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள குண்டல்பூர் கோவிலில் இருந்து திருடப்பட்டது. அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் வேலூரில் ஆஞ்சநேயர் சிலைகள் திருடப்பட்டன இந்த சிலை 600 முதல் 700 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தது. இந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து நமது தூதரகம் இந்த சிலையை மீட்டது” எனக் கூறினார்.

பெ சூர்யா நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்