உக்ரைன் மீது நாளை ரஷ்யா போர்த் தொடுக்கும் – இந்தியர்கள் வெளியேற உத்தரவு.

0
175

சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஆயுதங்களையும் பீரங்கிகளையும் ரயில் மூலம் கொண்டு வந்து குவித்தது.

அப்போதிலிருந்து இன்று வரை உக்ரைனில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் சூழலில் நாளை ரஷ்யாவானது உக்ரைன் மீது போர் தொடுக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் “விளாடிமிர் ஜெலன்ஸ்கி” தனது முகநூல் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கு தகுந்தாற்போல் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளும், ஜெர்மனி படைகளும் பெரும் ஆயுதங்களுடன் உக்ரைனில் களம் இறங்கி போருக்கு தயாராகியிருக்கின்றன. ஜெர்மனி தனது இராணுவ பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது. அது போல 80 டன்னுக்கும் அதிகமான சக்தி வாய்ந்த ஆயுதங்களை அமெரிக்கா உக்கரைனில் களம் இறக்கியுள்ளது.

இந்த அசாதாரணமான சூழ்நிலையில் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக உக்கரைனில் கல்வி கற்கும் மாணவர்கள் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்