உக்ரைன் மீட்புப் பணிக்காக மத்திய அமைச்சர்களை அனுப்புகிறார் பிரதமர்?

0
152

ரஷ்யா உக்ரைன் இடையே நடைபெற்று வரும் கடும் போரின் காரணமாக உக்ரைனில் வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதற்கட்டமாக நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகத்திற்கு அழைத்து வந்துள்ளது மத்திய அரசு. இன்னமும் உக்ரைனில் சில பகுதிகளில் இந்தியர்கள் பலர் போர் சூழலில் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார்கள். அவர்களையும் மீட்க மத்திய அரசு விரைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அமைச்சர்கள் சிலர் மீட்புப் பணிகளுக்காக அங்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமைச்சர்கள் சிலர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைப்பார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் குறித்து விவாதிக்க உயர்நிலைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்