திருக்குறளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி உரை…

0
353

(31-01-2022)

நாட்டின் 75வது மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்” கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றினார்.கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மேம்பாடு, கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தில் இந்தியாவின் நிறைவான செயல்பாடுகள், என பல்வேறு முக்கியமான அம்சங்களை பற்றி அவர் குறிப்பிட்டு உரையாற்றினார்.

கிராமப்புற உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த ஆண்டு மட்டும் நாடெங்கும் 36 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சாலைகள் போடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.
“கற்க கசடற கற்பவைக் கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற குறளை மேற்கோள் காட்டிப் பேசிய அவர் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட “வ. உ. சிதம்பரனாரின்” 150 ஆவது பிறந்த நாளையும் நினைவு கூர்ந்தார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்