வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம் – தேர்தல் ஆணையம்

0
156

தமிழ்நாடு தேர்தல் ஆணையமானது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகளை தீவிரபடுத்தியுள்ளது. நாளை 22ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தமிழ்நாடு முழுவதும் சுமார் 268 மையங்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்துள்ள அறைகளை மூடி சீல் வைத்தது தமிழ்நாடு தேர்தல் ஆணையம். மேலும் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளின் வெளியே பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீசாரை இரவு பகலாக கண்காணிப்புப் பணிக்காக ஈடுபடுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி தீவிர கண்காணிப்பின் கீழ் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது எனவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்