விசாரணைக் கைதிகளை இரவு நேரத்தில் காவல்நிலையத்தில் வைக்கக் கூடாது. டிஜிபி உத்தரவு

0
161

விசாரணைக் கைதிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார் .

அண்மையில் சென்னையில் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி விக்னேஷ் என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் .

அது போல திருஅண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தங்கமணி என்பவரும் நீதிமன்றம் விடுவித்த பிறகும் சிறையில் உயிரிழந்தார்.

எஸ்.பி முதல் தமிழ்நாட்டின் புதிய டிஜிபி வரை.. சைலேந்திர பாபுவின் மிரட்டலான  பின்புலம்! | Background and Story of IPS officer C Sylendra Babu who has  been appointed as the new DGP of ...

இவ்வாறு உயிரிழந்த இருவரது உறவினர்களும் காவல் துறையினர் தாக்கியதால்தான் உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர்.இந்த இரு சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்த வழக்கானது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது.இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இரவு நேரத்தில் விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்