ஸ்டாலின் வெளிநாடு பயணம் பற்றி செய்தியளர்களுக்கு பேட்டி

0
284

தமிழக வளர வெளிநாடு சென்றதுபோல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு நட்புறவை மேற்கொண்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போதெல்லாம் விமர்சனம் செய்த திமுக இப்பொழுது கொண்டாடுகிறார்கள். ஆனால் நாங்கள் போக வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் உலகநாடுகளுக்கு செல்லுங்கள் முதலீடுகளை ஏற்றுக் கொண்டு வாருங்கள் தமிழகத்தின் நலனுக்காக மட்டுமல்லாமல் இந்திய நலனுக்காகவும் உழையுங்கள்.

தமிழக முதல்வர் தமிழகத்தின் பெருமையை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வது தமிழகத்துக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அதுவே பெருமை என்று சொல்லிய வானதி சீனிவாசன்

டீம்இந்தியா ஒட்டுமொத்தமாக இந்தியா முன்னேற்றத்திற்காக அவர்கள் செயல் செயல்பட வேண்டும் என்பதுதான் என் ஒரே கோரிக்கை என்று வானதி சீனிவாசன் கூறினார். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேசிய ஒற்றுமைக்கு எதிராக பேசுவதே அவர்கள் குறிக்கோளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த எண்ண ஓட்டம் தான் எங்களுக்கு மிகப் பெரும் வேதனையாக இருக்கிறது என்று கூறினார்.

பாலியல் குற்றங்களுக்கு சட்டத்தில் என்ன அளவு உச்சபட்ச தண்டனை இருக்கிறதோ அந்த தண்டனையை கொடுக்க வேண்டும் என்பது இன்றைக்கும் என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அந்த சம்பவம் வெளிவந்த உடனேயே கோயம்புத்தூர் காவல்துறை கண்காணிப்பாளரை பார்த்து முதன்முதலில் மனு கொடுத்ததே நான்தான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அதற்கு பின்பு தான் அவர்கள் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினார்கள். இதுபோன்ற வழக்குகளை உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும். எது உயர்ந்த பட்ச தண்டனையோ அதை கொடுக்க வேண்டும். அதாவது இந்த சம்பவம் போல் இனிமே ஒரு சம்பவம் நடக்க கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஒவ்வொரு முறையும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது இது கடைசியாக இருக்கட்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம்.

பாலின சமத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அது சட்டப்பேரவையில் துவங்கவேண்டும் சொத்துரிமை வேறு,வாக்குரிமை வேறு, எங்களுக்கென்று ஒரு இடம் இருக்கிறது அங்கே நாங்கள் நிற்கிறோம் இதுபோல் தனித்துவமாக இடம் வேண்டும். ஆண்களுடன் முண்டியடித்துக் கொண்டு செல்ல முடியாது.என்பதைத்தான் நான் சட்டப் பேரில் பேசினேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்