பாக்கிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி தப்புமா ?

0
130

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சியில் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர நாட்டின் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் எப்படிப்பட்ட நெருக்கடிகள் இருந்தாலும் பதவி விலகப் போவதில்லை என்று இம்ரான்கான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 172 இடங்கள் தேவைப்படும் நிலையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெகரிக்கே இன்சாப் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் 179 இடங்களை வென்று கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் இம்ரான்கானின் கட்சியை சேர்ந்த சுமார் 20 அதிருப்தி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்
போது இம்ரான் கானுக்கு எதிராக வாய்ப்பளிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது அரசு கவிழும் என கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இதுவரை எந்த பிரதமரும் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத வேளையில் 2023 ஆட்சி வரை இம்ரான் கானின் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்