இணையத்தில் வைரலாகும் கிச்சானாலே இளிச்சவாயன் தானா சார்? நெட்டிசன்கள் கிண்டல்

0
313

விலங்கு வெப் சீரிஸின் கிச்சா என்னும் கதாபாத்திரம் பேசும் ‘கிச்சானாலே இளிச்சவாயன் தான் சார்’ என்னும் டெம்பிளேட் சமீபத்தில் இணையத்தில் மீம்ஸ்களாக தெறிக்கவிடப்படுகின்றன.

வெப் சிரீஸ் பார்த்த பலரும் இதனை கண்டு விழுந்து விழுந்து சிரித்தனர். ஆனால், விலங்கு பார்க்காத பலரும் என்ன இது என குழம்பிப்போகினர். யார் இந்த கிச்சா? எதற்காக கிச்சா என்ற பெயர் பேசும் பொருளானது?

சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற க்ரைம்- த்ரில்லர் வெப் சீரிஸ் விலங்கு. பிரசாத் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த வெப் சீரீஸில் விமல், இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இவர்களை தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நடிகர் ரவியின் நடிப்புதான்.

காவல் நிலையத்தில் டீ வாங்கித்தருவது உள்ளிட்ட எடுபிடி வேலை செய்யும் அப்பாவியாக காட்டுவதில் தொடங்கி, தொடரின் இரண்டாவது பாதி முழுக்க ஆக்கிரமிக்கிறது கிச்சா கதாபாத்திரம். இதில், கிச்சா பேசும் சில வசனங்கள் தற்போது இணையவாசிகளின் மீம் கண்டென்டாக மாறியுள்ளது.
குறிப்பாக “கிச்சானாலே இளிச்சவாயன் தான்”, “தேடட்டும் சார்.. அவங்க என்னை அடிக்குறப்போ எப்படி இருந்துருக்கும்” போன்ற சீரியஸான வசனங்கள் கூட தற்போது காமெடி வசனங்களாக மாற்றி வருகின்றனர் இணையவாசிகள்.

டாஸ்மாக்கில் அதிகமாக பணம் வாங்குவது, தான் மெசெஜ் செய்தது தனது க்ரஷ் தோழி அண்ணா என்பது, 90ஸ் கிட்ஸ்ஸுக்கு திருமணம் ஆகாதது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு கிச்சானாலே இளிச்ச வாயன்தானா என்ற டெம்பிளேட்டை சுற்றலில் விடுகின்றனர்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்