திரும்பி செல்லவேண்டும் மழலைகள் பருவத்திற்கு சாத்தியமா ?

0
625

மழலைகள் யாவர் ? இந்த வார்த்தையை கேட்டவுடன் நம் நினைவுகள் திரும்பிச் செல்வது நம் குழந்தைப் பருவத்திற்குத்தான்.என்ன விலைகொடுத்தும் வாங்கமுடியுமா அந்த பிஞ்சுநினைவுகளை?

நாம் ஏன் வளர்ந்தோம் இப்படியே இருந்துவிடலாகாதா என்று மனம் இன்றும் நொந்து கொள்கின்றது .கேட்டது அனைத்தும் கிடைக்கும் எந்த கவலையும் இருக்காது எல்லாம் நிம்மதியை தரும் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுடனுன் கொஞ்சி விளையாடும் போது அந்த எண்ணங்கள் சொல்லி மாளாது

அந்தப்பிஞ்சு விரல்கள் கொஞ்சும் பேச்சுக்கள் மழலை வார்த்தைகள் காதிற்கினிய கவிதைகளைச்சொல்லும் காணக்கிடைக்காத வரம் அந்தக்கண்மணிகளின் அரைகுறை விளையாட்டுகள் சேட்டைகள் தப்பே செய்தாலும் ரசிப்போமே தவிர கோபப்படுவோமோ?

அனைவரும் அந்தப்பருவம் தாண்டித்தானே வந்துள்ளோம் அந்த ஆனந்தம் சொல்லிமாளுமா சேட்டைகள் செய்வது தெரிந்தும் ரசிப்போம் பகிர்வோம் பலரிடம் வாழ்க்கையில் விரக்தியடையும் நிலைவரும்போது நாம் அனைவரும் கட்டாயம் திரும்பிச்செல்ல நினைக்கும் ஒரு இடம் குழந்தைப்பருவம்

காலச்சக்கரம் என்னதான் நம்மை சுற்றி போட்டாலும் அதில் பயணம் செய்து நாம் பின்னோக்கிச் செல்ல நேர்ந்தால் அதற்கு முதல் பிரதிநிதித்துவம் கொடுப்பது இந்த குழந்தை பருவத்திற்காகத்தான் இருக்கும் இதை யாராலும் மறுக்க முடியாது.

நாம் என்று அறுபது வயதை தொடுகின்றோமோ அன்றே மீண்டும் அந்த குழந்தை நிலையை அடைகின்றோம் ஆனால் வயது முதிர்ந்த நிலையில் அவ்வாறானசெயல் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி பல முதியோர் இல்லத்தை நிரப்பி வருகின்றது

ஒரு சிலர் விதிவசம் மற்றையோர்? முடிந்தளவு உற்றார் உறவினரிடம் அன்பை பகிர்வோம் குழந்தைகள்போல கள்ளக்கபடமின்றி எதையும் மனதில் வைக்காமல். அன்பே கடவுள் அரவணைப்பே மருந்து என குழந்தையாய் வாழ்வோம் வாழ்வாங்கு ! ! !

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்