இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா ?

0
142

இந்தியாவிற்கு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு திட்டமிட்டபடி வழங்கப்படும் என்று ரஷ்யா நேற்று உறுதி அளித்திருந்தது.

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கலாமா வேண்டாமா என அமெரிக்க ஆலோசித்து வருவதாக தகவல் வந்துள்ளது. இந்தியாவிற்கு திட்டமிட்டபடி இந்தியாவிற்கு s-400 ஏவுகணை தடுப்பு சாதனம் வழங்கப்படும் என ரஷ்யா அறிவித்திருந்த, நிலையில் ஜோபைடன் தலைமையிலான அமெரிக்க குழு இந்தியாவிற்கு எந்தவிதமான பொருளாதார தடை விதிக்கலாம் என ஆலோசனை செய்து வருவதாக தகவல் வந்துள்ளது.

டிரம்ப் ஆட்சிக்காலத்தில் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை ரஷ்யாவிடமிருந்து இந்தியா பெறுவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழ்நிலையில், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க லாமா வேண்டாமா, அப்படி விதிப்பது என்றால் எந்த விதமான பொருளாதார தடை விதிப்பது என்பதை ஜோபைடன் நிர்வாகத்தின் ஆலோசனை குழுவில் விவாதித்து வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்