விஜய்க்கு யஷ் போட்டியா? தொடர்ந்து வெளிவரும் படங்கள் – வைரலாகும் பீஸ்ட் Vs கேஜிஎஃப்

0
192

நடிகர் விஜய் மற்றும் கன்னட நடிகர் யஷ் ஆகிய இருவரது படங்களுமான ‘பீஸ்ட்’ மற்றும் ‘கே.ஜி.எஃப்2’ அடுத்த மாதத்தில் வெளியாக இருக்க நிலையில் ‘பீஸ்ட்’ Vs ‘கே.ஜி.எஃப்2’ சர்ச்சைக்கு யஷ் விளக்கம் அளித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு ‘கே.ஜி.எஃப் – சாப்டர்1’ திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளி போய் தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு படம் அடுத்த மாதம் 14ம் தேதி ‘கே.ஜி.எஃப்2’ தமிழ், தெலுங்கு, கன்னடம் என பேன் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. கரண் ஜோகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

‘கே.ஜி.எஃப்’ படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் அமைந்திருக்க ட்ரைய்லரில் ஆக்‌ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வைகளை யூடியூப் தளத்தில் ட்ரைய்லர் கடந்துள்ளது. முன்னோட்ட காட்சிகளில் யஷ் பேசும், ‘Violence Violence Violence, I Don’t Like Violence But Violence Likes Me’ வசனங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.


நேற்று டிரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில், ‘நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘கே.ஜி.எஃப்’ ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது. இதனால், இணையத்தில் ‘பீஸ்ட்’ vs ‘கே.ஜி.எஃப்’ என பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறது. நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த போட்டியினை எப்படி சமாளிக்க போகிறீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.


இந்த கேள்விக்கு யஷ், ‘முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ‘பீஸ்ட்’ vs ‘கே.ஜி.எஃப்2’ என்பது போன்ற போட்டியே கிடையாது. ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் வெளியாகிறது என்றால் ‘பீஸ்ட்’ மற்றும் ‘கே.ஜி.எஃப்2’ என்று தான் பார்க்க வேண்டும். இது சினிமா. அரசியல் களம் கிடையாது. யாருக்கு அதிக பார்வையாளர்கள் என்பதை பார்க்க. இரண்டு படங்களையுமே நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். நானும் முதல் நாள் போய் ‘பீஸ்ட்’ படத்தை நடிகர் விஜய் ரசிகர்களுடன் சென்று பார்ப்பேன். விஜய் போன்ற மாஸ் ஹீரோ அவருக்கென்று ஒரு இடத்தை வைத்திருக்கிறார். சினிமாவில் எனக்கு மூத்தவரான அவரை நான் மதிக்கிறேன்.

அதுவும் இல்லாமல் போட்டிக்காக இப்படி படத்தை நாங்கள் வெளியிடவில்லை. எட்டு மாதத்திற்கு முன்பே நாங்கள் ‘கே.ஜி.எஃப்2′ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டோம். அந்த சமயத்தில் எங்களுக்கு இப்படியான படங்கள் வரும் என்று தெரியாதே! அதனால், இரண்டு படங்களையுமே பார்த்து கொண்டாடுங்கள்’ என தெளிவுப்படுத்தி ‘பீஸ்ட்’ vs ‘கே.ஜி.எஃப்2’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.யஷ்ஷின் இந்த பேச்சு ரசிகர்களிடையே தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்