பா.ஜ.க வெற்றியை கொண்டாடிய இஸ்லாம் இளைஞர் மதவெறியர்களால் அடித்துக்படுகொலை

0
125

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றதை கொண்டாடிய முஸ்லிம் இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுரமான முறையில் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபர் அலி 25, இவர் பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இதற்கிடையில் உபி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. அது போன்று தேர்தல் பிரசாரங்களில் பாபர் அலி தொடர்ந்து பங்கேற்று பாஜகவுக்கு ஓட்டு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாபர் அலி பகுதியில் வசித்து வந்த முஸ்லிம் மக்கள் இடையில் சிலர் இவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், பாஜகவில் தொடரக்கூடாது என சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் அதனை பாபர் அலி கண்டுக்கொள்ளாமல் கட்சி பணியை செய்து வந்தார். இந்நிலையில், உபியில் வெற்றிப்பெற்றத்தை பாஜக இனிப்புகள் வழங்கி மாவட்டம் தோறும் கொண்டாடி வருகின்றது. அதே போன்று தனது இடங்களில் பாபர் அலி இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார். இதனிடையே கடந்த 20ம் தேதியன்று வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பாபர் அலியை முஸ்லிம் கும்பல் வழிமறித்து கொடுரமான முறையில் கொலை செய்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்