சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

0
74

சிரியா நாட்டின் ராணுவத் தளத்தின் மீது இஸ்ரேல் விமானப் படை ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியா இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவைப் பெற்ற சிரியா போராளிகள் பலரும் பதுங்கி உள்ளனர்.

இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகளை முற்றிலும் அழிப்பதற்காக இஸ்ரேலானது எதிர் தாக்குதல் நடத்துவது உண்டு.

அந்த வகையில் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கே சிரியாவின் ராணுவத் தளத்தின் மீது குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பெரும்பாலான ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைநிறுத்தி தடுக்கப்பட்டதாகவும் சிரியா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்