காற்று நிரப்பும் போது வெடித்த ஜேசிபி டயர்.! தூக்கியெறியப்பட்ட இருவர் பலி

0
77

சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜேசிபி இயந்திரத்தின் டயர் வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வாகன பட்டறை ஒன்றில் ஜேசிபி எந்திரத்தின் டயரில் ஊழியர்கள் இருவர் காற்று நிரப்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்