கடலூர் மாநகராட்சி மேயரானார் சுந்தரி.

0
136

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றது. தற்போது மாநகராட்சி மேயர் தேர்தலில் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில் கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்று மேயராக பதிவி ஏற்க உள்ளார் திமுகவின் சுந்தரி. உட்கட்சியிலேயே போட்டி வேட்பாளரை மேயர் தேர்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி. திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக சுந்தரியைதான் ஏற்கனவே திமுக அறிவித்தது.இந்நிலையில் திமுக வின் மற்றொரு கவுன்சிலர் சுந்தரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். ஒரு கட்சிக்குள்ளேயே இருவரும் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட நிலையில் தற்போது திமுக அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரான சுந்தரியே கடலூரில் மேயராக வெற்றி பெற்று இருக்கிறார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்