உக்ரைனில் தவிக்கும் எனது மகன்கள் இருவரையும் காப்பாற்றுங்கள் ! கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அரசுக்குக் கோரிக்கை.

0
133

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையைச் சேர்ந்த கீதா என்பவர் உக்ரைனில் உள்ள தனது இரண்டு மகன்களையும் மீட்டு இந்தியாவிற்கு அவர்களைப் பத்திரமாக அழைத்து வர வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுபற்றி கூறிய அவர், தனது இரண்டு மகன்களும் உக்ரைனில் மருத்துவம் படித்து வருவகின்றனர் எனவும் மூத்த மகன் 4ஆம் ஆண்டும், இளைய மகன் முதலாம் ஆண்டும் படித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போரால் தனது மகன்கள் எங்கு உள்ளனர் என்பதும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் யாவும் கிடைக்கிறதா என்பது பற்றி எதுவும் தெரியாமல் பெற்றோர்களாகிய நாங்கள் தவித்து வருவதாகவும் தனது வேதனையை தொலைக்காட்சி செய்தி ஒன்றில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதற்றமான சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து தனது மகன்களுடன் சேர்த்து உக்ரைனில் தவித்து வரும் அனைத்து இந்திய மாணவர்களையும் பத்திரமாக மீட்டுத் தாயகத்திற்கு அழைத்து வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனில் தவித்து வரும் இந்தியர்களை மீட்கத் தீவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விமானங்கள் மூலம் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக அவர்களை இந்தியா கொண்டு வர அந்நாடுகளிடம் அனுமதி வாங்கி உள்ளதாகவும், மீட்புப் பணிக்கான இந்திய விமானங்கள் யாவும் தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்