தமிழக தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

0
190

விளாத்திகுளம் கயத்தாறு கனமழைக்கு அதிக வாய்ப்பு. மேற்கு திசைக்காற்று நின்று விரைவில் கிழக்கு திசைக்காற்று வீசும். வடகிழக்கு பருவமழை 27ம்தேதியை ஒட்டிய நாட்களில் தொடங்க உள்ளது . இந்த நிலையில் காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்று முதல் நெல்லை, தென்காசி, குமரி, தேனி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும். கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்யும்.

விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்பு.
குறிப்பாக நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்கள் அதிகமழையை பெறும். தூத்துக்குடி மாவட்டத்திலும் 20 ம்தேதிக்கு பிறகு வலுவான மழை பெய்யும். வரும் 5 நாட்களுக்குள் எதாவது 2 நாட்கள் விளாத்திகுளம், கயத்தாறு, கோவில்பட்டி, எட்டயபுரம் ஆகிய இடங்களில் வலுவான மழை பெய்யும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட பகுதிகள் மழைபெறும்.

தென்தமிழக மலைப்பகுதிகளுக்கு எச்சரிக்கை :

இன்று முதல் 5 நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை தொடர்மழையாக இருக்காது. தினசரி பகலில் வெயிலும், மதியத்திற்கு பிறகு இடிமின்னலுடன் மிக கனமழையும் பெய்யும்.இந்த வானிலை அறிவிப்பு அடுத்த 5 நாட்களுக்கு பொருந்தும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்