எடியூரப்பவின் பெயர்த்தி தற்கொலை:

0
197

(28-01-2022)

கர்நாடக பாஜக அரசியல் தலைவரும் முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான எடியூரப்பவின் பெயர்த்தி சவுந்தர்யா இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். சவுந்தர்யா, எடியூரப்பவின் இரண்டாவது மகளுக்கு பிறந்தவர் ஆவார். இவருக்கு 2018 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் இன்று காலை பெங்களூரின் குமாரகுருபரர் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதனையறிந்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

சவுந்தர்யா தற்கொலைக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.. இந்நிகழ்வு எடியூரப்பவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்