“கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில்” திருவிழா இன்று மாலை கொடி ஏற்றத்துடன் தொடக்கம்

0
319

இந்தியா இலங்கை இடையே வங்கக்கடல் பரப்பில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது . தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்கள் கூட்டாக ஆண்டு தோறும் இத்திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம் . இதையொட்டி அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க இந்தியா மற்றும் இலங்கைக் கடலோரக் காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக மீனவர் சிக்கலை வைத்து இலங்கையானது இத்திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது . ஆகையால் இம்முறை தமிழ்நாட்டிலிருந்து 80 மீனவர்கள் மட்டுமே இந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர் . ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 3 விசைப் படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு ஆகியவற்றில் மீனவர்கள் கட்சத்தீவுக்குப் பயணம் செய்கின்றனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்