‘கெர்சன்’ நகரைக் கைப்பற்றியது ரஷ்யா ராணுவம்.

0
323

உக்ரைன் ரஷ்யா இடையே 7ஆவது நாளாக இன்றும் பெரும் போர் நீடித்து வருகிறது . இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரான ‘கெர்சன்’ நகரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக ரஷ்யா ராணுவம் அறிவித்துள்ளது.கெர்சன் நகரை முழுவதுமாக தாங்கள் கைப்பற்றி இருப்பதாக ரஷ்யா ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மக்களின் உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் தலைநகரமான கிவ் நகரையும், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரையும் சூழ்ந்து கொண்ட ரஷ்யப் படைகள் இரு நகரங்களையும் கைப்பற்றும் நோக்கில் அந்நகரங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது . இந்த தாக்குதலில் நவீன் என்ற இந்திய மாணவன் நேற்று பலியானான் . கடந்த மூன்று நாட்களாக கெர்சன் நகரைக் குறி வைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று கெர்சன் நகரை முழுவதுமாக கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்