“லாலு பிரசாத் யாதவ்” குற்றவாளி என அறிவிப்பு – நீதிமன்றம்.

0
189

மாட்டுத்தீவன மோசடி வழக்கில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் “திரு.லாலு பிரசாத் யாதவ்” ஏற்கனவே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வந்தார். மொத்தம் 4 வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வந்த அவர் தற்போது ஐந்தாவது மோசடி வழக்கிலும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

5 ஆவது மோசடி வழக்கில் அவர் ரூபாய் 139.35 கோடி மோசடி செய்துள்ளதாகவும் இந்த வழக்கிலும் அவர்தான் குற்றவாளி எனவும் கூறி ராஞ்சியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் மூலம் மீண்டும் லாலு பிரசாத் யாதவிற்கு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்